ROTE LEARNING VS CONCEPT LEARNING
மனப்பாடம் செய்யும் திறன் அனைவருக்கும் மிக மிக அவசியமான ஒரு திறனாகும் . ஆனால் கற்பிக்கும் போது, கற்றுக்கொள்ள வேண்டியவைகளை மனப்பாடம் செய்து கற்றுக்கொள்வது ஓரளவுக்கு தேர்வுகளுக்கு வேண்டுமென்றால் உதவலாம். மேற்படிப்பிற்கோ அல்லது பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து பணிகளுக்கு செல்லும்போதோ இக்கற்றல் முறை ஒரு போதும் உதவாது.
இன்றைய போட்டி சூழலில், மாணவர்கள் தாங்கள் கற்ற அறிவை பயன்படுத்தும் திறன் பெற்றிருக்க வேண்டும். (Application Skills) அதனால்தான் ‘கான்சப்ட் கற்றல்’ (Concept Learning) மற்றும் அனுபவ கற்றல்(Experiential Learning) வெற்றிகரமான கல்விக்கு முக்கியம் ஆகும். ஆகவே “கருத்தியல் கற்றல்” (Concept Learning) மற்றும் அனுபவ கற்றல் (Experiential Learning) முறை கற்கும் கருத்தியலை நன்கு புரிந்து கொள்ளவும், அவர்கள் ஏற்கனவே அறிந்தவற்றை பயன்படுத்தவும் (Application) உதவுகிறது.
மாணவர்களும் வெவ்வேறு பாடங்களில் இருக்கும் கருத்தாக்கங்கள் (Concepts) ஒவ்வொன்றும் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புடையவை (Inter-disciplinary connection) என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.
தங்கள் வாழ்க்கை முழுவதும் எந்த ஒரு சூழ்நிலையிலும் கல்வியைத் தொடரவும், இப்படிப்பட்ட “கற்றல் முறை கட்டமைப்பை” மாணவர்கள் உருவாக்கிக் கொள்ள பெற்றோர்களும் ஆசிரியர்களும் உறுதுணையாக இருக்கவேண்டும். மனப்பாடம் செய்து மதிப்பெண்கள் பெறுவது எதற்கும் உதவாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கருத்தியல் கற்றல் மூலம் மற்றும் அனுபவ கற்றல் (Experiential Learning) மூலம் கற்கும் மாணவர்கள் எப்படிப்பட்ட தேர்வையும் எளிதாக சந்திக்கவும் அதிக மதிப்பெண்கள் பெறவும் மிக உதவியாக இருக்கும்.
கல்வி என்பது மதிப்பெண்களை நோக்கி ஓடும் ஓட்டம் அல்ல; கருத்தியலை புரிந்து கற்கவும் அதிக மதிப்பெண்கள் பெறவும் ஒரு நல்ல முறை. மனப்பாட கற்றலை தவிர்த்து, “கருத்தியல் கற்றல்” (Concept Learning) மற்றும் அனுபவ கற்றல்(Experiential Learning) முறையில் கற்கும்போது மாணவர்கள் மிக அதிக மதிப்பெண்கள் பெறுவது மட்டுமல்ல அவர்கள் மேற்கொண்டு உயர்கல்விக்கு போகும்போது இது மிகவும் தேவையான ஒரு சிறந்த அடித்தளமாக அமையும்.
ஆகவே மனப்பாடம் செய்து கற்றுக் கொள்ளும் முறைக்கு (ROTE LEARNING) மாற்றாக ‘கான்சப்ட் கற்றல் முறையை (CONCEPT BASED LEARNING) மற்றும் அனுபவ கற்றல் (Experiential Learning) முறையை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து சொல்க் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
இதனடிப்படையில் மாணவர்களுக்கு உதவி ஆசிரியர்களும் பெற்றோர்களும் மற்றவர்களும் செய்யும் கான்செப்ட்
லேர்னிங் முறை, அனுபவ கற்றல் (Experiential Leaming) முறை பற்றி நன்றாக தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டும். கருத்தியல்களை புரிந்து ஒவ்வொன்றுக்கும் இருக்கும் தொடர்புகளை தெரிந்து கொண்டு கற்கும் முறையே மிகச் சிறந்த கற்றல் முறை.
கற்றல், கற்பித்தல், திறனாய்வு செய்தல் இந்த மூன்றும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத தொடர்புடையவைகள். ஆகவே தொடர் திறனாய்வு (Continuous and Comprehensive Assessment-CCA) இதில் ஒரு முக்கியமான அம்சமாகும்.
மதகொண்டபள்ளி மாதிரி பள்ளியின் கற்றல், கற்பித்தல், திறனாய்வு செய்யும் முறை ஒரு தனித்துவ முறையாகும். ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வில் எமது மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதும் நீட் போன்ற தேர்வுகளில் சுலபமாக வெற்றி பெற்று நல்ல நிலையில் அவர்கள் இருப்பது பலருக்குத் தெரியாதது தான்.
மேற்கொண்டு உங்களுக்கு தேவையான விபரங்களை தெரிந்து கொள்ள கீழ்காணும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்:
மதகொண்டப்பள்ளி மாதிரிப்பள்ளி, ஓசூர்
+91 4344 668270 |280
M. Meru
secretary@ricemms.com
www.ricemms.com